எக்ஸோடஸ் சட்ட நிறுவனம்நிறுவனத்தைப் பற்றியப் பதிவு எக்ஸோடஸ் லா கார்ப்பரேஷன் என்பது சிங்கப்பூரை மையமாகக் கொண்ட ஒரு நன்கு நிறுவப்பட்ட சட்ட நிறுவனமாகும். எங்கள் வழக்கறிஞர் குழு, நீங்கள் எதிர்ப்பார்க்கிற முடிவுகளைப் அடைய, தரமான ஆலோசனை மற்றும் பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது. எங்கள் கட்சிக்காரர்கள் தங்கள் தெரிவுகளை முழுமையாக புரிந்துகொள்வதை உறுதி செய்ய, சட்ட செயல்முறையைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் நாங்கள் விளக்கி சொல்வோம். உங்களுக்கு சௌகரியப்படும் வகையில் நாங்கள் ஆலோசனை வழங்கி, உங்களைப் பிரதிநிதிப்போம். மேலும் உங்கள் வழக்கு சிக்கலாக இருந்தாலும், உங்களுக்கு உதவுவோம்.. பலதரப்பட்ட சட்டப்பிரிவுகள் சம்பந்தப்பட்டக் குற்றங்களுக்கு, எங்கள் குழு தொழில்முறை ரீதியில் சட்ட ஆலோசனையையும் பிரதிநிதித்துவத்தையும் வழங்குகிறது: · குற்றவியல் சட்ட பிரதிநிதி o எங்கள் வழக்கறிஞர்கள், குற்றவியல் சட்டம் சம்பந்தப்பட்டக் காரியங்களில் பரந்த அனுபவம் உள்ளவர்கள். இதில் தண்டனைச் சட்டம், மருத்துவ பதிவுச் சட்டம், சாலை போக்குவரத்துச் சட்டம் போன்றவைத் தொடர்பிலான குற்றங்கள் அடங்கும். o வர்த்தக குற்றங்கள் மற்றும் கிரிமினல் குற்றங்கள்
· குடும்ப தகராறுகள் (சிவில் மற்றும் இஸ்லாமிய ஷரியா சட்டம்) o உள்ளூர், வெளிநாட்டவர்களுக்கிடையிலான எல்லைத்தாண்டிய விவாகரத்து o சிவில் மற்றும் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ், விவாகரத்து o இள வயது குழந்தைகளுக்கான பாதுகாவல் பொறுப்பு, பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டுரிமை o மனைவி மற்றும் / அல்லது திறன் குன்றிய கணவரின் பராமரிப்பு o குழந்தை பராமரிப்பு. பராமரிப்பு ஆணையில் மாறுபாடு செய்தல். o மகளிர் சாசனத்தின் கீழ் தனிநபர் பாதுகாப்பு ஆணை o இதர துணை விவகாரங்கள்
· குடும்ப சட்டம் தொடர்பான சேவைகள்
o தத்தெடுப்பு o உயில் o நீதி மன்றமளிக்கும் நிர்வாக உரிமைப் பத்திரம் வழங்குதல்
· தனியார் மற்றும் நிறுவன நொடிப்பு நிலை தொடர்பிலான காரியங்கள் · பொதுவான சிவில் தகராறுக்கானத் தீர்வு மற்றும் வழக்கு (ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்டத் தகராறு, ஒப்பந்தங்களை மீறல் போன்றவை ) · மத்தியஸ்தர் சேவைகள்
எங்கள் வழக்கறிஞர்கள்
எங்கள் குழுத் தலைவர் 20 வருட சட்ட அனுபவமுள்ள திரு டேனியல் அட்டிகஸ் சு. அவர் ஒரு நீத்மன்ற வழக்கறிஞர், வழக்கு ஆலோசகர், பாரிஸ்தர், மத்தியஸ்தர் மற்றும் கூட்டு சட்ட நடைமுறை வழக்கறிஞர். தமது சட்டத் துறையில், திரு டேனியல், குடும்பச் சட்டம், குற்றவியல் சட்டம், சிவில் சட்டம் , நிறுவன மற்றும் வணிகச் சட்டம் தொடர்பானவற்றில் கணிசமான அனுபவத்தையும் அறிவாற்றலையும் பெற்றுள்ளார். திரு டேனியல், மத்தியஸ்தர் பணி, கூட்டு பயிற்சி மற்றும் வழக்கு விசாரணை ஆகியவற்றில் திறன் பெற்றுள்ளார். அவர் ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழிகளில் சரளமாக உரையாடுவார். எங்கள் குழுவின் மற்றொரு முக்கிய உறுப்பினர் குமாரி ஹீக்மா வாகஹியானுவார். அவர் பல்துறை நடைமுறைச் சட்ட வல்லுநர். தொழில்முறைத் திறனுடனும் இரக்கத்துடனும் மிகவும் சிக்கலான வழக்குகளைக் கையாள்வார். அவர் ஆங்கிலம், மலாய் மற்றும் இந்தோனேசிய மொழியில் சரளமாக உரையாடுவார். . எங்கள் நிபுணத்துவக் குழுவுடன் இணைந்து செய்லபட இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். |